அதிமுக தனித்து ஆட்சி அமைப்பது உறுதி..! - எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் பாஜக கே.பி.ராமலிங்கம் அதிரடி பேட்டி..!

 
1

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், அதில் அதிமுக தனித்து ஆட்சி அமைப்பது உறுதி எனவும் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் திமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தேர்தலில் தெரிவித்துள்ளதால், அதிமுக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது என கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசு கொண்டு வந்த எஸ்ஐஆரை முதலில் எதிர்த்த திமுக, தற்போது ஆதரித்துள்ளதாக கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.