ஜெயக்குமார், கே.பி. முனுசாமியால் தான் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது - அண்ணாமலை

 
Annamalai

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, மூன்றாவது இடத்திற்கு சென்று விடுவோம் என்ற பயத்தினால் திமுகவை ஜெயிக்க வைக்க அதிமுக விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை 

Annamalai

அண்ணாமலை வெளியே போய்விட்டால் அதிமுக இழந்த இடத்தை பிடித்து விடலாம் என எண்ணுவது பகல் கனவு . அண்ணாமலை இல்லாவிட்டாலும் வேறு யாராவது வந்து பாஜகவை வளர்ப்பார்கள் ஜெயக்குமாரும் , முனுசாமியும் செய்தியாளர் சந்திப்பு நடத்துவதால் தான் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது . செய்தியாளர் சந்திப்பை அடுத்த நடத்த பாஜகவிற்கு ஓட்டு வாங்கி அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

annamalai

சு.வெங்கடேசன் மீது எழுத்தாளர் என்ற மரியாதை இருந்தாலும் கூட ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக அவர் பேசுவது பொய்யாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வேண்டாம் என்று கூறுபவர் வெளியே வந்தால் செங்கல் வேண்டும் என்கிறார்.  செங்கோலை  எதிர்க்கும் அவர் மதுரை மேயரிடம் ஏன் செங்கோலை கொடுத்தார். அப்படி என்றால் அவர் திருவள்ளுவரையும் எதிர்க்கிறாரா? என்றார்.