"அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான்" - எடப்பாடி பழனிசாமி

 
rr

மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ep

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், பிரதமர்  தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாஜக தலைவர் ஜே பி நட்டா ரோடு ஷோ நடத்தினார்கள் . இருப்பினும்  பாஜக வெற்றி பெறவில்லை.  மற்ற கட்சிகளில் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுகவை பொறுத்தவரை நான் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன்.

EPS

 2019 மக்களவைத் தேர்தலை விட ஒரு சதவீத அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு இது வெற்றியே.  திமுக , பாஜகவை விட அதிமுக தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.  திமுக 2019ல் பெற்றதை விட 6. 59 சதவீத வாக்குகளை குறைவாகவே பெற்றுள்ளது. சசிகலா , ஓபிஎஸ் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. எஸ்.பி வேலுமணிக்கும் , எனக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.  அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை,  எந்த பிரிவும் இல்லை.  எங்கள் கூட்டணியில் பாஜக இருந்த போது அண்ணாமலையை அடையாளம் காட்டியது அதிமுக தான் என்றார்.