இபிஎஸ்சை எதிர்த்து ஓபிஎஸ் போட்டியா?

 
அட்


அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது என்று அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. இதில் எடப்பாடியை எதிர்த்து அவரது அணியினர் யாரும் போட்டியிடப்போவதில்லை என்றாலும் ஓபிஎஸ் அல்லது அவரது அணியினர் போட்டியிட வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

 அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார் இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.  இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,   அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற கட்சியின் சட்ட விதியின் படி பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

எ

 இந்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் நாளை மார்ச் 18 ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் . நாளை பதினெட்டாம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 மேலும்,   மார்ச் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் , மார்ச் 20 ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் , மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒ

 மேலும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அதிமுக தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமான பெறலாம் என்றும் , விதிமுறைகளை பின்பற்றி விருப்பமுனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

 அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுகவின் சட்ட விதிகளின்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் . ஜனநாயக முறையில் இந்த தேர்தல் நடைபெறும் . பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று அறிவித்திருக்கிறார் . 

எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து யார் போட்டியிடப் போகிறார்? யாரும் போட்டியிடப் போவதில்லை.  கடைசியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட போகிறார்.  இதுதான் நடக்கப்போகிறது என்று  அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.   அதே நேரம் இந்த தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.   அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் அடிப்படை உறுப்பினர் தகுதி காலாவதி ஆகிவிட்டது . அதனால் ஓபிஎஸ்க்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை.  அவரும் அவர் அணியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்று அழுத்தமாக சொல்கிறார் ஜெயக்குமார்.