அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் மார்ச் 26ல் தீர்ப்பு - ஐகோர்ட்..

 
அதிமுக

அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் மார்ச் 24-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியாக அறிவித்துள்ளார்.  

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல்  2 நாட்கள் நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது.  முதல் நாளான நேற்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தற்போது வரை யாரும்  வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.  ஆகையால் எடப்பாடி பழனிசாமி  போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

admk office

இதனிடையே, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு  நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும்நிலையில்,   பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் என்றும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி,   அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தேர்தலை  இபிஎஸ் அணி நடத்தலாம்; ஆனால் தேர்தல் முடிவை  அறிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

admk

அத்துடன் தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு முன் விசாரணைக்கு எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.  அதாவது  ஜூலை 11ம் தேதி அதிமுகவின்  பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் என முன்னதாக  ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த பிரதான வழக்கின் விசாரணை முன்கூட்டியே மார்ச் 22-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மார்ச் 24-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி குமரேஷ் பாபு  கூறினார். இதன்மூலம் பல மாதங்களாக தொடந்து வரும் அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.