நிலம் வாங்கித் தருவதாக ரூ.96 லட்சம் மோசடி - அதிமுக நிர்வாகி கைது..!!

 
arrest arrest

கரூர் மாவட்டத்தில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி வழக்கறிஞரிடம் ரூ. 96 லட்சம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 

கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னள் தலைவர் பாலமுருகன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கறிஞரான ரகுநாதன் என்பவர் நிலம் வாங்குவது தொடர்பாக அணுகியுள்ளார்.  அப்போது நிலம் வாங்கித்தருவதாகக் கூறி வழக்கறிஞர் ரகுநாதனிடம் ரூ.96 லட்சத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.  ஆனால் அதன்பிறகு நிலமும் வாங்கித்தராமல்,  பணத்தையும் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.  

money  fraud

வழக்கறிஞர் ரகுநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னள் தலைவர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார்.  கைதான பாலமுருகன் தற்போது கரூர் மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.