விஜயபாஸ்கரின் ராஜினாமாவை எதிர்த்து அதிமுக வழக்கு
Jul 3, 2026, 18:06 IST1783082177984
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளதாகவும், விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜினாமா விவகாரத்தில் மனதை செலுத்தாமல் எந்திரத்தனமாக சபாநாயகர் முடிவெடுத்துள்ளார். இது அரசியல் சாசனம் மற்றும் இயற்கை விதிகளுக்கு எதிரானது எனவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

