பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

 
ச்

பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Image


காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம்(60). இவர் அதிமுக கட்சியில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய வீட்டில் வாடகைக்கு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் பெண்கள் குடியிருந்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய வீட்டில் குடியிருந்த பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை தொடப்பகட்டையால் சரமாரி அடித்து அவரை விரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் பொன்னம்பலத்தை  கைது செய்து தீவிர விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் இளம்பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு துடைப்பத்தால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கட்சியின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துள்ள கூடாது என கேட்டுக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.