அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

 
tnn

அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

tn

சென்னை தண்டையார்பேட்டையில், வட சென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

tn

முன்னதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ  சத்யாவின் இல்லத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ  சத்யா  வேட்புமனுவில்  தனது சொத்து மதிப்பு 2 கோடியை 78 லட்சம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியிடுமாறு கேட்டபோது,  அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே இரண்டு லட்சம் என தகவல் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.