அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஈபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
ep

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ep

கடந்த ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடிய நிலையில் அக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் .அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ .பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சட்டப் போராட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்ற நிலையில்,  அதிமுக என்னும் மாபெரும் கழகத்தின் பொதுச் செயலாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் தற்போது அதிமுக செயல் பட்டு வருகிறது 

eps

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி பணிகள்,  அதிமுக கிளை கழக பணிகள் , உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.