நவ.21ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- எடப்பாடி பழனிசாமி

 
admk

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் நவம்பர் 21ம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ep

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் வரும் 21.1.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறிட்து மாவட்ட பொறுப்பாளர்கள், அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.