எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 
eps

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ப்ப்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 10ம் தேதி மாவட்டசெயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என முன்னதாக கட்சி தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக தலைமை கழக செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

admk meeting

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது குறித்தும், அதற்கான களப்பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.