அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது

 
admk

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.ep
அதிமுக என்னும் மாபெரும் கழகத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக வலம் வருகிறார். இந்த சூழலில் ஓ. பன்னீர்செல்வம் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அண்மையில் சந்தித்து இருவரும் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தார்.

ep

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் , பூத் கமிட்டிகள் குறித்து விவாதிக்கலாம் தகவல் வெளியாகிறது . அதே சமயம் ஓபிஎஸ் மற்றும் தினகரன்  ஒன்றிணைந்துள்ள இந்த அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.