அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது!!

 
admk

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EPS

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், நாளை 21.11.2023 - செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்." என்று குறிப்பிட்டுள்ளார்.