அ.தி.மு.க. சார்பில் பெண்களுக்கு 'பெப்பர் ஸ்ப்ரே' விநியோகம்..!

 
1 1

தி.மு.க. ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் குற்றம் சாட்டி கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கரை நகரக் கழகச் செயலாளர் சண்முகராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர், நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுந்திராபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்களுக்கும், பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கும் பெப்பர் ஸ்ப்ரே வழங்கினர். அதைத் தொடர்ந்து, கோவை - பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் பெப்பர் ஸ்ப்ரே வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விநியோகத்தில் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, பெண்களிடையே தற்காப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்