நிலக்கோட்டை அருகே அதிமுகவினர் போலி காசோலை டோக்கன்கள் விநியோகம்..?

 
1

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே தொகுதியில் கடந்த 2006,2019 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற இவர், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு மூன்று முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

இந்த சூழலில், நிலக்கோடட்டை சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் தேன்மொழிக்கு அதிமுக சீட் கொடுத்துள்ளது.


இந்நிலையில் ஏற்காடு, நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய இடங்களில் செக்' மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர். தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் மாதிரி செக்குகளை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அதிமுகவினர் போலி காசோலை டோக்கன்கள் விநியோகம் செய்வதாக புகார்..தேர்தல் பறக்கும் படையினர் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஏற்கனவே பிரச்சாரத்துக்கு வந்த அதிமுக பெண் வேட்பாளரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வியெழுப்பிய இரண்டு பேரை கட்சிக்காரர்கள் அடித்து உதைத்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது போலி காசோலை புகாரில் சிக்கி இருப்பது அவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது