15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்

 
ராமநாதபுரம் சிகாமணி

ராமநாதபுரத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோவில் கைதான அதிமுக கவுன்சிலர் சிகாமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

படிக்க உதவி கேட்ட பள்ளி மாணவியை மாறி மாறி கற்பழித்த கவுன்சிலர், 2 பெண்  உட்பட 5 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த கணேசன் மகன் சிகாமணி(43). இவர் அதிமுகவில் நகர் அவை தலைவராக உள்ளார். பரமக்குடி நகர் மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வருகிறார். இவர் பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியின் பள்ளி படிப்புக்கு உதவி செய்வதாக கூறி, காரில் அழைத்து சென்று மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில், அதிமுக கவுன்சிலர் சிகாமணி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அதிமுகவின் நகர் அவை அதலைவராக இருந்த சிகாமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவினர் யாரும் சிகாமணியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.