தங்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு ஆசிரியர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - அதிமுக

 
admk office

தங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் இந்த விடியா திமுக அரசுக்கு ஆசிரியர்கள் ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவார்கள் என அதிமுக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், மடிப்பிச்சை ஏந்திய கையோடு நா தழுதழுக்க பேசும் அந்த ஆசிரியையின் வலியும் வேதனையும் உங்களுக்கும் உங்கள் விடியா அரசின் அமைச்சர்களுக்கும் புரிய வாய்ப்பில்லை மு.க.ஸ்டாலின் அவர்களே, ஒரு ஆசிரியரே மடிப்பிச்சை ஏந்தும் அளவிற்கு இந்த விடியா அரசின் வண்டவாளம் வீதிக்கு வந்துவிட்டது! இதற்கு இந்த விடியா அரசின் முதல்வரும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.


ஸ்பெயின் இன்பச்சுற்றுலா, போட்டோஷூட், அமைச்சரின் ரசிகர் மன்றப் பணி ஆகியவற்றில் செலுத்தும் கவனத்தை இந்த விடியா அரசின் அமைச்சரவை மக்கள் நலனில் செலுத்தியதில்லை என்பதற்கு தமிழ்நாடு முழுக்க நடக்கும் போராட்டங்களே சாட்சி. பாடம் எடுத்தே பழக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் இந்த விடியா திமுக அரசுக்கும் ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.