முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் மனு

 
admk

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 8 ஆயிரத்து 474 வாக்குகளும் பெற்றனர். வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள மேற்கு மண்டலத்திலேயே தென்னரசு பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும் மொத்தம் பதிவான வாக்குகளில் பாதியை கூட பழனிசாமி தரப்பால் பெற முடியவில்லை. 

Mk Stalin

இந்நிலையில் இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் விதிமீறல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் 100க்கும் மேற்பட்ட இடங்களில், பொதுமக்களை அடைத்து வைத்ததாகவும் ஈரோட்டில் பிரசாரத்தின் போது மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 என பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் மூலமாக புகார் மனு அளித்துள்ளார்.