அதிமுக பொதுக்குழு முடிந்து ஊர் திரும்பிய போது நடந்த சோகம் - அதிர வைக்கும் சம்பவம்!!

 
tn

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்று திரும்பிய உறுப்பினர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

accident

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது . சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  அதே சமயம் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 14 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  அத்துடன் இந்த கைகலப்பில் 17 பேர் காயம் அடைந்தனர். இதன் எதிரொலியாக வருவாய் துறை அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளது.

tn

இந்நிலையில் மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கரூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில்  4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்று திரும்பியபோது இச்சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வரும்போது ஏற்பட்ட விபத்தில் அதிமுகவினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதுராந்தகம் அருகே அதிமுகவினர் சென்ற வேன், கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 15க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த அதிமுகவினர், சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.