#BREAKING தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக- 35 தொகுதிகளை எதிர்பார்க்கும் பாஜக
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று வருகை புரிந்தனர். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி வருகை புரிந்தனர். தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத்தும் பழனிசாமி இல்லத்துக்கு சென்றுள்ளார்.
72 தொகுதிகள் கொண்ட பட்டியலை அதிமுகவிடம் வழங்கியுள்ளது பாஜக. NDA கூட்டணியில் 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஆயிரம் விளக்கு,தி.நகர், வேளச்சேரி தொகுதிகளையும் திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, தளி, ஆலங்குளம், தென்காசி, சிங்காநல்லூர், அரவக்குறிச்சி, திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட தொகுதிகளையும் பாஜக கேட்டுள்ளதாக டதகவல்கள் தெரிவிக்கின்றனர்.

