சரிந்து விழுந்த அதிமுக பேனர்.. விபத்தில் சிக்கிய தந்தை...மகன்...
எடப்பாடி பழனிசாமி ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அதன்படி வரும் 13, 14 ஆம் தேதிகளில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். அவரை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேனர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பேனர் காற்றில் கிழிந்து சாலையில் இருசக்கர வாகனம் மீது விழுந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மேம்பாலத்தில் இருந்து பேனர் கிழிந்து சாலையில் சென்ற பைக் மீது விழும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேனர் விழுந்து காயம் அடைந்த தந்தை, மகன் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? எந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

