பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை?

 
admk

 அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவை சார்ந்த நிர்வாகிகள் பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ep

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீட்டுக் குழு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கே.பி.முனுசாமி, M.L.A., அவர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., அவர்கள் கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர், பி. தங்கமணி, M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் 4. திரு. S.P. வேலுமணி, M.L.A., அவர்கள் கழக தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. பா. பென்ஜமின் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

tn

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக, தேமுதிகவின் எதிர்பார்ப்புகளை அதிமுக தலைமை கோரியுள்ளது என்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணி அமைக்க அதிமுக வியூகம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.