அகமதாபாத் விமான விபத்து; முதலாமாண்டு நினைவு தினம்!

 
Q

குஜராத்தின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர், விடுதியில் இருந்த 5 மாணவர்கள் மற்றும் 14 பொதுமக்கள் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார். விபத்தின் ஓராண்டு நினைவு தினமான இன்று ஏர் இந்தியா ஊழியர்கள் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், விமான விபத்தின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏர் இந்தியா ஊழியர்கள் இன்று பகல் 1.39 மணி முதல் 1.41 மணிவரையில் இரண்டு நிமிடங்கள் மட்டும் பணியிடங்களில் இருந்தவாறே மௌன அஞ்சலி செலுத்துமாறு ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.