"எச்ச டிவி... ஷேம் விஜய் சேதுபதி!" - பிக் பாஸ் நிகழ்ச்சியை விளாசிய பார்வதி..!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பார்வதி, தற்போது சமூக வலைதளங்களில் அந்த நிகழ்ச்சியையும் அதன் தொகுப்பாளரையும் கடுமையாக விமர்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் போட்டியாளர்கள் அந்த அனுபவம் குறித்துப் பேசத் தயங்குவார்கள். ஆனால், பார்வதியோ ஒரு படி மேலே சென்று, அந்தத் தொலைக்காட்சியை "எச்ச டிவி" எனச் சாடியுள்ளார். ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில் அவர் இன்னும் "பிக் பாஸ் மோடில்" தான் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தன்னைப் பின்தொடர்பவர் ஒருவர், "பிக் பாஸ் 9-ன் உண்மையான டைட்டில் வின்னர் நீங்கள் தான்" என்று பதிவிட்டதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பார்வதி, "ஜோக்கர்கள் இப்போது மனிதர்களாகி விட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "Show runner is shame" என்று பதிவிட்டு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஒரு முன்னணித் தொலைக்காட்சியையும், மக்கள் மதிக்கும் ஒரு நடிகரையும் இவ்வளவு மோசமாகப் பேசியதற்காக, பார்வதி மீது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகச் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.


