உறவை முறித்து கொள்வதாக அக்ரிதி அகர்வால் அறிவிப்பு..! நிச்சயதார்த்தம் முடிந்த 6 மாதத்தில் இப்படி ஒரு முடிவா..?

 
1

இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பிரித்வி ஷா. அடுத்த சச்சின் டெண்டுல்கராக பிரித்வி ஷா உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஊக்க மருந்து பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். இதன்பின் உள்ளூர் போட்டிகளிலேயே கவனம் செலுத்தாத பிரித்வி ஷா, ஃபிட்னஸிலும் கொஞ்சம் கூட கவனம் செலுத்தவில்லை.

ஒரு கட்டத்தில் ஐபிஎல் ஒப்பந்தமே கிடைக்கவில்லை. இருப்பினும் கடந்த சீசனில் டெல்லி அணி அவரை அடிப்படை தொகைக்கு வாங்கியது. சர்வதேச ஜாம்பவான்கள் கூட பிரித்வி ஷாவுக்கு கடிதம் மூலமாக அட்வைஸ் கொடுத்தனர். இதன்பின் ரஞ்சி டிராபியில் மும்பை அணியில் இருந்து விலகிய பிரித்வி ஷா, மகாராஷ்டிரா அணிக்காக ஆடி வருகிறார்.

இதனிடையே பிரித்வி ஷா சொந்த வாழ்க்கையிலும் அடுத்தக் கட்டத்திற்கு சென்றார்.பிரித்வி ஷா மற்றும் அவரின் காதலி அக்ரிதி அகர்வால் இருவருக்கும் மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது.

இந்நிலையில், அக்ரிதி அகர்வால் தனது சமூக ஊடகப் பதிவில், தங்களுடைய எதிர்காலம் குறித்த குறிக்கோள்களும் சூழ்நிலைகளும் மாறுபட்டிருப்பதே இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் இன்னும் ஒருவரையொருவர் நேசித்தாலும், தங்களின் பாதைகள் இனி ஒன்றாக பயணிக்க முடியாது என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

"கனத்த இதயத்துடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன். எங்களுடைய எதிர்காலக் குறிக்கோள்களும் சூழ்நிலைகளும் வெவ்வேறாக இருப்பதால், நானும் எனது நிச்சயிக்கப்பட்ட மணமகனும் பிரிவது என முடிவு செய்துள்ளோம்" என்று ஆகிருதி குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையும் கொண்டிருந்தாலும், எங்கள் பாதைகள் இனி ஒன்றாக இணைய வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுடைய தற்போதைய பொறுப்புகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இருவரும் சம்மதத்துடன் தனித்தனி வழிகளில் செல்ல தீர்மானித்துள்ளோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

பிருத்வி ஷா மற்றும் அக்ரிதி அகர்வால் ஜோடிக்கு கடந்த 2026 மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவின் புகைப்படங்களை பிருத்வி ஷா தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து, கடந்த ஜூலை மாதத்தில் ஆகிருதி இணையத்தில் வெளியிட்ட சில புதிர் போன்ற பதிவுகள், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் குறிக்கும் வகையில் வதந்திகளை எழுப்பியது. இருப்பினும், அந்த நேரத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

பிருத்வி ஷா 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடவில்லை. அவரது குறுகிய கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் சவாலானதாக அமைந்தது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சில சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி தனது அசாத்திய திறமையை அவர் அவ்வப்போது நிரூபித்தாலும், தற்போதைக்கு இந்திய அணிக்குத் திரும்புவது அவருக்கு ஒரு எட்டாக் கனவாகவே உள்ளது.