வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் - 133 நபர்களுக்கு பணி நியமன ஆணை!!

 
tt
முதலமைச்சர்  ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 133 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
tt

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (29.6.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முகமைகள் வாயிலாக அரசுத் துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

govt

அதன் தொடர்ச்சியாக, வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு மூலம் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கி வாழ்த்தினார். இதன்மூலம், வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்ட தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.