முதலமைச்சரின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதலமைச்சரின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஒப்பந்தமாகியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரப்போவதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ள் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக சுற்றுலா சென்றிருக்கிறார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. Knorr-Bremse நிறுவனம் ரூ.2,000 கோடி, Nordex Group நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு, ebm-papst நிறுவனம் ரூ.201 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஒப்பந்தமாகியுள்ளது. ஜெர்மனி முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள BMW ஆலையை விரிவாக்கம் செய்யவும் அண்ந நிறுவனத்தின் அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளனர்.

