திமுக - மதிமுக இடையே இன்று உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு

 
tn

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி,  காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது இருக்கிறது.  

arivalayam

அதே சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது.  இந்த சூழலில் திமுக கூட்டணியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கைகோர்க்க உள்ளதாகவும்  கூறப்படுகிறது. 
 vaiko

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - மதிமுக, விசிக இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விசிகவுக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், இரண்டு கட்சிகளும் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.