தமிழ்நாட்டில் தொடங்கியது கத்திரி வெயில்...எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

 
tn

அக்னி நட்சத்திரம் வெயில் இன்று முதல் தொடங்கியது.  இதனால் வழக்கத்தை காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

summer
அதிக வெப்பத்தை அளிக்கும் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.  இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும் கத்திரி வெயிலால்,  தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.  வழக்கத்தைக் காட்டிலும் வெப்பநிலை அதிகமாக இருக்குமென்பதால் பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ள குடை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அத்துடன்  நீராகாரம் பொருட்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

tn

தமிழகத்தில் நேற்று வேலூரில் அதிகபட்சமாக 105 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.  அதேபோல திருத்தணி மற்றும் திருச்சியில் 104 டிகிரி செல்சியஸ்,  மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி செல்சியஸ் ,ஈரோடு, கரூர் ,பரமத்தி ,தஞ்சை ஆகிய இடங்களில் 102 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 101 டிகிரி செல்சியஸ் பாளையங்கோட்டையில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.