அகல்விளக்கு பதிப்பகமே போலி.. பூட்டிக்கிடக்கும் வீடு - பகீர் தகவல்

 
s

கோவை பெரியார் அறிவுலகில் ‘அகல்விளக்கு பதிப்பகம்’ எனும் போலிப் பதிப்பகத்தின் பெயரில் சுமார் 1800 நூல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 


இந்நிலையில் திமுக ஆட்சியில் போலி பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கபட்டதாக தவெகவும், இதற்கு தவெகவே காரணம் என திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றன.  இந்நிலையில் பெரியார் அறிவுலக விவகாரத்தில் அகல்விளக்கு பதிப்பக முகவரி சென்னையின் மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளதாக புத்தகத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பெயர் மோகன் என்று அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  பதிப்பகம் அமைந்துள்ள பகுதி  மடிப்பாக்கத்தில் உள்ளது. குறிப்பிட்ட முகவரியில் ஆய்வு மேற்கொண்டபோது, வீடு ஒன்று பூட்டப்பட்ட நிலையில் தான் உள்ளது. கீழே குடியிருக்கும் வட இந்திய தம்பியிடம் மேலே பப்ளிஷர்ஸ் இருக்காங்களா என்று கேட்டதற்கு தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Image

போலியான பதிப்பகம், போலியான ஆசிரியர்கள்! ஆனால் ISBN எண்கள் உண்மையானவை. அகல்விளக்கு பதிப்பகத்தின் 2393 புத்தகங்களும் உரிய 03/12/2024 முதல் 06/02/2026 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிஷா விஜய் என்ற ஆசிரியர் பெயர் உட்பட 609 ஆசிரியர் பெயர்களையும் பதிவு செய்துள்ளனர்.