திமுகவுடன் கூட்டணியா? மீண்டும் ஓபிஎஸ்- மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 
s s

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்தார்.

 

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். முன்னதாக முதலமைச்சர் காலை அடையாறு பூங்காவில் நடை பயிற்சி செய்தபோது, அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். உடல்நிலை குறித்து முதலமைச்சரிடம் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முதலமைச்சருடன் அவர் என்ன பேசினார் என்ற விபரம் வெளியாகவில்லை.


இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நேரில் சந்தித்தார். அவரை வாசல் வரை சென்று உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். 20 நிமிடங்களுக்கு மேலாக மு.க.ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு தொடர்கிறது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய அதே நாளில் முதல்வருடனான சந்திப்பு, திமுகவுடன் கூட்டணி அமைக்கிறாரா ஓபிஎஸ்? என்ற கேள்வியை எழுப்புகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.