விசாரணைக் கைது விக்னேஷ் வழக்கு: மேலும் 4 காவலர்கள் கைது..

 
விசாரணைக் கைது விக்னேஷ் வழக்கு: மேலும் 4 காவலர்கள் கைது..

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில்  மேலும் 4  காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் என்பவர் போலீசாரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷின் பிரேத பரிசோதனையில் தலை, கண் புருவம் உள்ளிட்ட 13 இடங்களில் உடலில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.  தலையில் பலத்த காயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது .   இதுகுறித்து  சட்டப்பேரவையில்  சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த,  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு முறையாக நடைபெற சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காவல்துறை தாக்குதல்

ஆனால்  விக்னேஷ் இறப்பு குறித்து கொலை வழக்கு பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த வழக்கு தொடர்புடைய காவலர்களை கைது செய்யுமாறு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் தமிழக காவல்துறைக்கு பரிந்துரை  செய்திருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதையே வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் , காவலர் பொன்ராஜ்,  ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகியோர் தற்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது

மேலும் தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.  தற்போது , விக்னேஷ் கொலை வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் 4 காவலர்கள்  கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  அதன்படி, தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைதாகியுள்ளனர்.