அறுவை சிகிச்சைக்கு பின்... மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர்..!

 
1 1

சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் (அக். 25) இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, நீண்ட துாரம் பின்னோக்கி ஓடிச் சென்று அருமையாக பிடித்தார் இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 30. அப்போது தடுமாறி விழுந்ததில் இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

பின் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'ஸ்கேன்' பரிசோதனையில் இவரது மண்ணீரலில் சிதைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ரத்தக்கசிவு காணப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.,) அனுமதிக்கப்பட்டார். சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் 5-7 நாள் ஓய்வு அவசியம். விரைவாக தேறி வரும் ஷ்ரேயஸ், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து 'நார்மல் வார்டு'க்கு மாற்றப்பட்டார். 

இந்த நிலையில், ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .