தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை..!

 
Q Q

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அந்த நாளில் விடுமுறை வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் போன்று, விடுமுறையை 21ஆம் தேதி ஈடு செய்ய 25ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, அடுத்த நாள் அரசு விடுமுறையாக இருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் சிறிது ஓய்வுடன் பண்டிகையை அனுபவிக்க முடியும் என்பது உறுதி.