விஷயத்தை கேள்விப்பட்டதும் சாப்பிடாமல் கூட ஓடிய முதல்வர் -அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

 
d

கள்ளச்சாராயம் சம்பவத்தில் அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில்,   சம்பவத்தை கேட்டவுடன் முதல்வர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்.  ஆறுதல் கூறி விட்டு திரும்பி வரும் வழியில் தான் அவர் சாப்பிட்டார் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

 வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலர் வெளியீடு மற்றும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது .  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதில் பங்கேற்று பேசினார் .

ச்ட்

அப்போது ,   ‘’24 மணி நேரமும் மக்களுக்கான திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகின்றார் தளபதி.  ஆனால் ஆட்சியில் சில நேரங்களில் சில தவறுகளை மக்கள் செய்து விடுகின்றார்கள்.   விஷசாராயம் குடித்து பல பேர் இறந்து விட்டார்கள் என்கிற செய்தியை கேட்ட உடனேயே சாப்பிடாமல் கூட முதல்வர் விழுப்புரத்திற்கு சென்றுவிட்டார்.   அங்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு திரும்பி வரும் வழியில் தான் அவர் சாப்பிட்டார்.

 இப்போது மட்டுமல்ல கொரோனா காலத்தில் கூட தனது உயிரை பணயம் வைத்து கோவை மருத்துவமனைக்கு சென்று அங்கே சிகிச்சை வரும் நோயாளிகளை பார்த்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டார்.   அடித்தட்டு மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று எங்கள் தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார் .  அதை தளபதி செயல்படுத்தி வருகிறார்’’ என்று கூறியிருக்கிறார் .

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை என்பது சாத்தியமில்லை  என்று கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம். பி. கார்த்திக் சிதம்பரமும் குற்றம் சாட்டி இருக்கும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் மேற்கண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்.