“எஸ்பி வேலுமணி மீதான புகாரை அப்பாவு வாபஸ் பெற்றார்; அந்த வாபஸ் புகாரை வைத்தே சோதனை”

 
SP velumani

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இல்லங்ககளில் லஞ்ச தமிழ்நாடு  ஒழிப்புதுறை சோதனை நடத்தி வரும் நிலையில் நாளை உச்சநீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக நீதிபதியிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று எஸ்.பி வேலுமணியின் வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் அகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் சோதனை குறித்து அ.தி.மு.க வை சேர்ந்த வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “எஸ்.பி வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியின காரணமாக நடத்தப்படுகிறது. இது குறித்து நாளைய தினம் உச்சநீதிமன்றத்தில்  எஸ்.பி வேலுமணி தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதியிடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம். எல்.இ.டி (LED) விளக்குகள் அமைப்பதில் முறைகேடு நடந்ததாக இப்போதைய சபாநாயகர் அப்பாவு திமுக செய்தி தொடர்பாளராக இருந்தபோது கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது சோதனை நடத்தி வருகிறது. ஆனால், சபாநாயகராக பொறுப்பேற்றவுடன் அப்பாவு சட்ட விதிமுறைகளின் படி எஸ்.பி வேலுமணி மீது அளித்த புகார் வாபஸ் பெற்று விட்ட நிலையில் மீண்டும் அப்பாவு புகாரை  வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்று இவ்வழக்கை முடித்து வைக்க வேண்டும் இல்லையயென்றால் அப்பாவு தன்னுடைய சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.