#BREAKING ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

 
velladurai velladurai

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் ஆர்டர் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

tt

சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12-க்கும் மேற்பட்டோரை என்கவுன்ட்டர் செய்தவர் வெள்ளத்துரை. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியதை அடுத்து, அந்த சஸ்பெண்ட் உத்தரவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்

2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளித்தது. சஸ்பெண்ட் நடவடிக்கை சர்ச்சையான நிலையில் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.