ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!!
May 31, 2024, 09:45 IST1717128910547

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணி ஓய்வு பெற இருந்த நிலையில் வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்தது தமிழ்நாடு அரசு. திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.