சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக மகளிரணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 
admk

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக மகளிர் அணியின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைக்கும் விதமாக, கழகத்தின் மீது பொய்யான அவதூறு செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் வகையில் அநாகரிகமான, அருவருக்கத்தக்க அறிக்கையை வெளியிட்ட விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரனைக் கண்டித்தும், அதிமுக மகளிர் அணியின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.