2026-ல் ஆட்சி மாற்றம் கன் ஃபார்ம்! எடப்பாடி பழனிசாமியே முதல்வர்: விஜயபாஸ்கர்

 
vijayabaskar

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக சென்னை, கே.கே.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் சார்பாக நடைப்பெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் , வளர்மதி, அதிமும தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். 

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு  வழக்கை வரும் டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து ...

இந்த களஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “ தென் சென்னையை பொறுத்தவரை விருகம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில், அதிமுக தலைமை உத்தரவுப் படி கள ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இரண்டு தொகுதிகளில் வெற்றி உள்ள வாய்ப்புகள் மற்றும் கருத்துகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. அதிமுகவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்து வருகிறார்கள். 2026 தேர்தலை சந்திப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழியில் அதிமுக தயாராக உள்ளது. மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதான் அடிப்படையில் கள ஆய்வு நடந்தது. 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

கள ஆய்வை பொருத்தவரைக்கும் இந்த மாவட்டத்தில் இரண்டு தொகுதி 2 தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. 2026 தேர்தல் என்பது யார் முதலமைச்சர் என்பதற்கும், ஆட்சி மாற்றம் என்பதன் அடிப்படையில் இருக்கும். ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார். அதிமுக கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் முடிவெடுப்பார்.  அதற்கான ஆயத்த பணி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. களத்தை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.