"நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் நீ... நாங்க 54 வருட ஆலமரம்"- வளர்மதி
Jul 19, 2026, 17:50 IST1784463600434
"நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் நீ... நாங்க 54 வருட ஆலமரம்!" என்று முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி பேசியிருக்கிறார்.
திருச்சி சிறுகளப்பூரில் இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புள்ளம்பாடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, “தவெக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்; 3 வருட கட்சிக்கே இவ்வளவு திமிர் இருந்தால் நாங்கள் 54 வருட ஆலமரம். நாங்கள் தீர்ந்து போய்விடுவோமா? திமுகவின் அடக்குமுறையை பார்த்தவர்கள், எதிர்த்து வந்தவர்கள் நாங்கள். எங்களை பெயர்க்க வேண்மென்றால் அவ்வளவு பெரிய புல்டோசர் வேண்டும்; அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது” என்றார்.

