தேர்தலுக்கு பின்பு தவெக காணாமல் போகும்- வைகை செல்வன்

 
vaigai selvan vaigai selvan

ஒன்றரை மாத குழந்தை ஒத்தைக்கொத்தை வருகிறாயா? சண்டையிட தயாரா? என்று கேட்பது போல தான் விஜயுடைய பேச்சு இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பின் தவெக காணமல் போய்விடும் என தவெக மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விமர்சித்துள்ளார்.

‘முன்பு பெரியார் பின்பு எம்.ஜி.ஆர். இப்போது அண்ணா.. சாயத்தால் சரித்திரத்தை வீழ்த்த முடியுமா”: வைகை செல்வன் ட்வீட்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டார். இதில் இறுதியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பேசிய அவருக்கு பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் உணவகத்தில் உணவருந்தினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தவெக மாநாடு குறித்து பேசிய அவர் விஜய் வருவதற்கு முன்பே தாரதாரையாக மக்கள் கிளம்பிவிட்டனர். இது தோல்விக்கான அறிகுறி.அதிமுக 7 முறை ஆட்சியில் இருந்த கட்சி தற்போது எதிர்கட்சியாகவும் அடுத்த முறை ஆளும் கட்சியாக வரவுள்ள கட்சி.ஒன்றை மாதக் குழந்தை தவெக கட்சி ஒன்றை மாதக் குழந்தை ஒத்தைக்கு ஒத்தை வருகிறாயா,சண்டையிட தயாரா என்பது கேட்பது போல் தான் விஜயுடைய பேச்சு உள்ளது.அவரது பேச்சு நகைப்புக்கூரியதாகவும், வேடிக்கையாகவும்,வினோதமாகவும் உள்ளது என்றார்.இந்த தேர்தலுக்கு பின்பு தவெக காணாமல் போகும் என்றார்.