அமைச்சருடன் ரகசிய சந்திப்பு- திமுகவில் இணைய தங்கமணி திட்டம்?
Dec 4, 2025, 19:29 IST1764856747877
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு வந்த அமைச்சர் முத்துசாமியை, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வரவேற்று அழைத்துச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு வந்த அமைச்சர் முத்துசாமியை, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வரவேற்று அழைத்துச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. தங்கமணியுடன் அரசியல் பேசாததாகவும், கோவில் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக பேசியதாகவும் முத்துசாமி விளக்கம் அளித்த நிலையில், தங்கமணி திமுகவில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. இந்நிலையில் யாரோ ஆகாத சிலர் வதந்திகளைப் பரப்புகிறார்கள், சமூக வலைத்தளங்களில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என விளக்கம் அளித்துள்ள தங்கமணி, சாகும்வரை அதிமுகவில்தான் இருப்பேன், முத்துச்சாமி தனது நண்பர் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


