நிர்மலா சீதாராமனுடன் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை சந்திப்பு

 
நிர்மலா சீதாராமனுடன் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை சந்தித்து உரையாற்றினார்.

Image

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்டோரும் உடன் சென்றனர். கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாலும் கூட்டணிக்கான பேச்சு என்பதை அமித்ஷா உறுதிப்படுத்தினார். அடுத்த சில தினங்களில் கே.ஏ. செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை சந்தித்து உரையாற்றினார். அதிமுக - பாஜக கூட்டணி குறித்தான தகவல்கள் பரவி வரக்கூடிய நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான அதிமுக எம்.பி.தம்பிதுரை சந்திப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.