டெல்டாவில் காலியாகும் அதிமுக கூடாரம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைகின்றனர். 4 முன்னாள் அமைச்சர்கள் உட்பட சுமார் 20,000 பேரை தவெகவில் இணைக்க திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்களும் நாளை தவெகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இணைப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை தவெகவில் இணையும் முக்கிய முகங்கள்:
C. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், திருச்சி வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன், பி. கே. வைரமுத்து, இளம்பை தமிழ்செல்வன், ஒரத்தநாடு சேகர், திருச்சி சீனிவாசன், மன்றாஜ், ராஜவர்மன், சாதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தரராஜன் & ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் நாளை தவெக இணைய உள்ளனர்.

