NDA கூட்டணியில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்- அதிமுக அறிவிப்பு
Mar 4, 2026, 21:35 IST1772640344071
2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

