“அண்ணா பற்றி பேசியதால் 2024ல் ஈபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும்”- எஸ்பி வேலுமணி
தேர்தலுக்காக பல கட்சியுடன் கூட்டணி வைப்போம், அதற்காக கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, “திமுக ஆட்சியில் எந்த திட்டமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார். இப்பொழுது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார். ஆர்எஸ் பாரதி எப்பொழுதும் சிண்டு முடியும் வேலையைத்தான் பார்ப்பார். அவருக்கு வயதாகி விட்டது, அதனால் ஏதாவது ஒரு அறிக்கை கொடுத்துக் கொண்டு இருப்பார். முருகன் மாநாடு குறித்து கேவலமாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை கொடுத்திருக்கிறார். அதிமுக எப்பொழுதும் சுயமரியாதையோடு கொள்கையை விட்டுக் கொடுக்காத இயக்கமாக இருக்கும்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை. இந்து முன்னணி மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பெரியார் , அண்ணாவை பற்றி வீடியோ போடுவது தெரியாது. அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும். துணிச்சலாக தைரியமிக்க தலைவராக முடிவுகளை எடுப்பவர் எடப்பாடி பழனிசாமி. கொள்கையை எப்போதும் எடப்பாடியார் விட்டுக்கொடுக்கமாட்டார்” என்றார்.


