தவெகவில் இணைகிறீர்களா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத செங்கோட்டையன்
என்னுடைய மனவேதனை உங்கள் அனைவருக்கும் தெரியும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பு கோரிக்கையை முன்வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கே.ஏ.செங்கோட்டையன், சமீபத்தில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோரை சந்தித்ததால் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. எம்எல்ஏ பதவியை நாளை (நவ.26) ராஜினாமா செய்துவிட்டு, 27ஆம் தேதி தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளார். அவருக்கு தவெகவில் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், தவெகவில் இணைவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இயக்கத்திற்காக உழைத்த எனக்கு, கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு. உறுப்பினராக இருக்கக்கூடாது என அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டவற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். என்னுடைய மனவேதனை உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார்.

