அதிமுகவில் இருந்து நீக்கம்! செங்கோட்டையன் சொன்ன பதில்

 
செங்கோட்டையன் செங்கோட்டையன்

அதிமுக கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பாக தனது கருத்தை தெளிவான விளக்கங்களுடன் கோபியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகவும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவரது கட்சி பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் இணைந்து செங்கோட்டையன் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கட்சி கோட்பாடுகளை மீறியதாக அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 


இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் பகுதியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “நாளை காலை 11 மணிக்கு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தெளிவான விளக்கங்கள் அளிக்க உள்ளேன்” என்றார்.